ஏழைகளுக்கான அரசு எனது: மோடி பெருமிதம்

வியாழன், 2 ஜூன் 2016 (19:22 IST)
மோடி அரசின் இரண்டாண்டு சாதனை விழா நிகழ்ச்சியில் எனது அரசு ஏழைகளுக்கான அரசாகும் என்று மோடி பெமையோடு கூறியுள்ளார்.


 

 
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று இரண்டாண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டு துவங்கும் நிலையில் மோடியில் சாதனை குறித்து நாடெங்கும் சாதானை விழா நிகழ்ச்சி நடைப்பெற்று கொண்டிருக்கிறது.
 
ஒடிசா மாநிலம் பலசோர் பகுதியில் உள்ள எய்ம்ஸ் அரங்கில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மோடி, தன் இரண்டாண்டு சாதனை குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
 
நாட்டின் அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சி பெற வேண்டும். வளர்ச்சி பலனில் எந்த பகுதியும் விடுப்படக்கூடாது. அரசு நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்க வேண்டும். எனது அரசு ஏழைகளுக்கான அரசு, எனது முயற்சிகள் எல்லாம் ஏழைகளின் நலன் சார்ந்ததே ஆகும். ஏழைகளின் நலன்களை கருத்தில் கொண்டுதான் அரசு திட்டங்களை வகுத்து வருகிறேன். பொதுமக்களுக்கு அரசு மீதான நம்பிக்கை இரண்டு ஆண்டுகள் முடிந்தும் குறையவில்லை, என்றார்.
 
மேலும் 18ஆம் நூற்றாண்டில் ஆண் குழந்தை பிறந்தால் கொண்டாடும் மக்கள், தற்போது 21ஆம் நூற்றாண்டில் பெண் குழந்தை பிறந்தால் கொண்டாடுகிறார்கள். இந்த நிலைமையை மாற்றி அமைத்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.   
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்