சமீபத்தில் அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் குறித்தான வழக்கில் உச்சநீதிமன்றம் ராமர் கோவில் கட்டலாம் எனவும், இஸ்லாமியர்கள் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் தனியாக ஒதுக்கப்பட வேண்டும் எனவும் உத்தரபிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்பதா? அல்லது மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதா? என்பது குறித்து அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்தின் தலைவர் மவுலானா வாலி ரஹ்மானி தலைமையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.