தடையை மீறி செல்ல முயன்ற எம்.பி; கீழே தள்ளிவிட்ட போலீஸ்! – உபியில் பரபரப்பு

வெள்ளி, 2 அக்டோபர் 2020 (13:34 IST)
உத்தர பிரதேசத்தில் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தை பார்க்க சென்ற திரிணாமூல் காங்கிரஸ் எம்.பியை போலீஸார் கீழே தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் உடலை பெற்றோரிடம் தராமல் காவலர்களே எரித்ததாக வெளியான செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று பெண்ணின் உறவினர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டதும், ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அங்கு பரபரப்பு எழுந்துள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இறந்த பெண்ணின் பெற்றோரை சந்திக்க திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் உத்தர பிரதேசத்திற்குள் செல்ல முயன்றார். எல்லையில் காவலர்கள் தடுத்ததை மீறி அவர் செல்ல முயன்றபோது ஏற்பட்ட அமளியில் அவர் கீழே தள்ளவிடப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்