இந்திய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்து சில மாதங்களாக ஆயிரத்திற்கும் குறைவாக தினசரி பாதிப்பு இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு கடிதம் எழுதி இருந்தது.