அமர்நாத் பனிக்குகையில் 2 லட்சத்துக்கு மேல் மக்கள் தரிசனம்!

புதன், 17 ஜூலை 2019 (18:38 IST)
இந்துக்களின் ஆன்மீக தளமான அமர்நாத் பனி லிங்கத்தை,  2லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 800 மீட்டர் உயரத்துஇல் அமைந்துள்ளது அமர்நாத் மலைக்கோயில். இங்கு ஆண்டுதோறும் பனியில் உருவாரும் இயற்கையாக லிங்கத்தைப் பார்ப்பதற்க்காக பலலட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வாடிக்கை. 
 
எனவே கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி அமர்நாத் ஆன்மீக யாத்திரை தொடங்கப்பட்டது.இந்நிலையில் 15ஆவது பேட்ஜ் பயணிகள் 967 பேர் பகவதி நகர் முகாமில் இருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. 
 
இவ்வாண்டு மட்டும்  இதுவரை 2 லட்சத்துக்கு 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்