அந்தரத்தில் நின்ற ரயில்..பயணிகள் பீதி

Arun Prasath

செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (12:58 IST)
மும்பையில் தொழில்நுட்ப கோளாறால் மோனோ ரெயில் ஒன்று அந்தரத்தில் நின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மும்பையில் செம்பூர்-ஜேக்கப் சர்க்கிள் இடையே மோனோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 10.15 மணியளவில் செம்பூர் மோனோ ரயில் நிலையத்திற்கு ஒரு மோனோ ரயில் வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் நடுவழியில் அந்தரத்தில் நின்றது. ரயிலில் 33 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இத்தகவலை அறிந்த நிர்வாகம், உடனே ஒரு ராட்சத கிரேன் வரவழைத்து ரயிலில் இருந்த 33 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். பிறகு தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு இரவு 09.33 மணியளவில் மோனோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. தொழில்நுடப கோளாறால் நடுவழியில் நின்ற மோனோ ரயிலால், அந்த வழியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும் இச்சம்பவம் அந்த பகுதி மக்களிடம் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்