குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர்.. கேரளாவில் பரபரப்பு..!

Siva

வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (17:43 IST)
கேரளாவில் குரங்கு அம்மை நோயால் ஏற்கனவே ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது இன்னொருவர் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்கா நாடுகளில் குரங்கு அம்மை  நோய் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படும் நிலையில் மற்ற நாடுகளிலும் பரவி வருவதாகவும் எனவே அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய 38 வயதான நபர் ஒருவருக்கு கடந்த 18ஆம் தேதி குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதியான நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்தவர் என்பதும் இவருடைய வயது 26 என்றும் இவருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்த நிலையில் ஆலப்புழாவில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்ததில் தொற்று உறுதியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கேரளாவில் குரங்கு அம்மை பாதித்தவர்கள் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது என்பதும் இந்தியாவைப் பொறுத்தவரை மூன்றாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குரங்கு அம்மை நோய் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கேரள மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்