அயோத்தி விவகாரம்: நரேந்திர மோடி - யோகி ஆதித்யநாத் சந்திப்பு!

சனி, 26 ஜூன் 2021 (13:34 IST)
உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று காணொலிக் காட்சி வாயிலாக சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

 
ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் அயோத்தி நகரில் மேற்கொள்ளவுள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மறு ஆய்வு செய்வதற்காக உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று காணொலிக் காட்சி வாயிலாக சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
 
இந்த மாதத் தொடக்கத்தில் யோகி ஆதித்யநாத் டெல்லியில் நரேந்திர மோதி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் அமித் ஷா ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று பிப்ரவரி மாதம் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.
 
இன்றைய சந்திப்பின் போது நரேந்திர மோதியிடம் சாலைகள், உள்கட்டமைப்பு, ரயில் நிலையம் உள்ளிட்டவற்றின் மேம்பாடு குறித்து யோகி ஆதித்யநாத் விளக்கினார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்