இந்நிலையில் வதோதரா மற்றும் வாரணாசியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நரேந்திர மோடியை வாழ்த்திய பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி, இந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த வெற்றியில் நரேந்திர மோடியின் பங்கு முக்கியமானது எனவும் மோசமான அரசு, ஊழல் மற்றும் பரம்பரை அரசியலை முடிவுக்கு கொண்டு வரவே மக்கள் இத்தகைய முடிவை எடுத்துள்ளனர் என கூறினார்.