மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆனந்த சர்மா

திங்கள், 21 நவம்பர் 2016 (14:14 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் தவறான செயலால் தாற்போது நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற மெல் சபை காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.


 

 
புதிய 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதம் சட்ட விரோதமாக உள்ளது என்று பாராளுமன்ற மேல் சபை துணைத்தலைவர் ஆனந்த சர்மா கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
புதிய ரூபாய் நோட்டு அச்சிட்டு, அறிமுகம் செய்வதற்கு முன் ரிசர்வ் வங்கி, அது தொடர்பான அறிவிக்கையை வெளியிட வேண்டியது அவசியம். ஆனால் ரிசர்வ் வங்கி அத்தகைய அறிவிக்கை குறித்து எதுவும் வெளியிடவில்லை.
 
பிரதமரின் தவறான இந்த செயலால், நாட்டில் தற்போது கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கருப்பு பணத்தை மீட்க வந்தவர் போல பிரதமர் மோடி நாடகமாடி ஏழை-எளிய மக்களை முட்டாளாக்கி கொண்டிருக்கிறார். இதற்கு மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 

வெப்துனியாவைப் படிக்கவும்