பிரான்ஸுடன் கையெழுத்தான ஒப்பந்தங்கள்: பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் சந்திப்பு

சனி, 24 ஆகஸ்ட் 2019 (09:02 IST)
பிரான்ஸ் அதிபருடனான பிரதமர் மோடியின் சந்திப்பை தொடர்ந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

பிரதமர் நரேந்திர மோடி, 3 நாடுகளில் 5 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நேற்று முந்தினம் அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு சென்றார். அதன் பின்பு பிரதமர் மோடியும் பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பு இருதரப்பிலும் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அதன் பின்பு இருவரும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு பேசினர். அதில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், காஷ்மீர் பிரச்சனை இரு தரப்பு பிரச்சனை. அதில் 3 ஆவது தரப்பு தலையிடவோ அல்லது அந்த பிராந்தியத்தில் வன்முறையை தூண்டவோ கூடாது என்று கூறினார். மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் சில நாட்கள் கழித்து பேசவுள்ளேன். அப்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று வழியுறுத்துவேன் எனவும் கூறினார்.

இதை தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதில் பிரான்சிடம் இருந்து இந்தியாவுக்கு கிடைத்து வருகிற மதிப்புதக்க ஆதரவுக்கு அதிபர் மேக்ரானுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பிரான்சுடனான உறவில் ராணுவ ஒத்துழைப்பு, முக்கிய தூணாக நிற்கிறது. அடுத்த மாதம் இந்தியா, ரபேல் போர் விமான தொகுதியில் முதல் விமானத்தை பெற்றுகொள்ளும் எனவும் கூறினார்.

மேலும் அந்த கூட்டறிக்கையில்,
அல்கொய்தா, ஐ.எஸ்., ஜெய்ஷ் இ முகமது. ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா ஆகிய அமைப்புகளின் பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வருவதை நிறுத்துவது,

பிரெஞ்சு, இந்திய கம்பெனிகள் இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டுப் பிரச்சனைகளை தீர்க்கும் பணியினை வலுபடுத்துவது போன்றவைகள் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்