சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கடந்த 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அவரது உடல் எரிக்கப்பட்டு அதன் சாம்பல் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி புத்த கோவிலில் இருப்பதாக கூறப்படுகிறது.
நேதாஜி மரணம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ உண்மைகளும் இன்று வரை தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் நேதாஜியின் மகள் அனிதா போஸ் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது பின்வருமாறு,
ஜப்பானில் உள்ளதாக கூறப்படும் என் தந்தையில் சாம்பலை எடுத்து டி.என்.ஏ சோதனை மேற்கொண்டால் அவரின் மரணத்தின் மர்மம் விலகிவிடும், இதற்கு இந்திய அரசும், ஜப்பான் அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.