நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் தரைதளத்தை தொடும்போது அதன் தொடர்பை இழந்தது. இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுபாட்டு அறையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அதன் பின்பு, ”கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமல்ல, நமது விண்வெளி திட்டம் குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளவேண்டும், நாட்டின் வளர்ச்சிக்காக நம்ப முடியாத அளவுக்கு பணியாற்றியுள்ளீர்கள். இது வரை யாரும் முயற்சிக்காததை நீங்கள் முயற்சி செய்துள்ளீர்கள், நமது விண்வெளி திட்டத்தில் இனிதான் பல உச்சங்கள் வரவுள்ளன. நானும் நாடும் உங்களுடனே இருப்போம்” எனவும் ஆறுதல் கூறினார்.
பிரதமர் மோடி உரையாற்றியபோது இஸ்ரோவின் பெண் விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டு அழுதனர். பிரதமர் மோடி உரையாற்றிவிட்டு திரும்பிய போது, இஸ்ரோ தலைவர் சிவன் மோடியிடம் கண்ணீர் விட்டு அழுதார். பிரதமர் மோடி சிவனை கட்டி தழுவி சிறுது நேரம் முதுகில் தடவி கொடுத்து ஆறுதல் கூறினார்.