சரக்கு அடிச்சிருக்கியா.. அந்த மதுப்பிரியர் கூண்டுல போடுங்க! – நூதன தண்டனை தரும் கிராமம்!

புதன், 20 அக்டோபர் 2021 (11:05 IST)
நாடு முழுவதும் பல இடங்களில் மது ஒழிக்கப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் குஜராத் கிராமம் ஒன்றில் வழங்கப்படும் தண்டனை வைரலாகியுள்ளது.

நாடு முழுவதும் மதுபான விற்பனையும், மதுப்பிரியர்களின் சேட்டையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல இடங்களில் மக்கள் மதுபானக்கடைகளை மூட கோரி போராட்டம் நடத்துவதும் தொடர்கிறது. அதேசமயம் சில கிராமங்கள் மது ஒழிப்பை கிராம அளவில் நிறைவேற்றி பின்பற்றுவதும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் குஜராத்தில் உள்ள மோதிபுரா என்ற கிராமத்தில் மது அருந்திவிட்டு வருவோருக்கு வழங்கப்படும் தண்டனை வைரலாகியுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த யாராவது மது அருந்திவிட்டு வந்தால் அவர்களை ஒரு இரும்பு கூண்டுக்குள் அடைத்து வைத்து விடுகிறார்களாம். அபராதம் செலுத்தினால் அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். இந்த அபராத தொகை கிராம மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. மோதிபுரா கிராமத்தின் இந்த ஐடியாவை மேலும் 23 கிராமங்கள் செயல்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்