நேற்று டெல்லி சென்ற தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், தனது டெல்லி பயணம் அரசியல் பயணம் இல்லை என்றும், தனது சகோதரர் சிகிச்சைக்காக ராணுவ விமானத்தை கொடுத்து உதவி செய்த நிர்மலா சீதாராமனுக்கு நன்றி கூறவே டெல்லி வந்ததாகவும் செய்தியாளர் முன் கூறினார்.
ஓபிஎஸ் அளித்த இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ விமானத்தை பயன்படுத்துவதில் பல விதிமுறைகள் இருக்கும்போது எந்த பதவியிலும் இல்லாத ஒருவருக்கு ராணுவ விமானத்தை கொடுத்தது விதிமீறல் என முன்னாள் ராணுவ அதிகாரிகள் பேட்டி அளித்து வருகின்றனர். இதனால் இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் தற்போது நிர்மலா சீதாராமன் உள்ளார்.
மேலும் இந்த விஷயத்தை பெரிதாக்க எதிர்க்கட்சிகளும் முயன்று வருகின்றன. குறிப்பாக ராணுவ விமானத்தை விதிமுறை மீதி பயன்படுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் விதிமுறையை மீறி சலுகை பெற்ற பன்னீர்செல்வமும் பதவி விலக வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் நிர்மலா சீதாராமனின் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது