ஓ.பி.எஸ் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது திமுக சார்பில் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க ஓ.பி.எஸ் நேற்று டெல்லி சென்றார். ஆனால், அவரை தனது அலுவலக வாசலில் 45 நிமிடம் வரை காக்க வைத்துவிட்டு, அவரை சந்திக்காமலேயே திருப்பி அனுப்பினார் நிர்மலா சீதாராமன்.