குர்லா ரெயில் நிலையத்திலும் அது போன்ற சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று ஹெட்போனை மாட்டிக் கொண்டு இளம்பெண் பாண்டுப்பை சேர்ந்த பிரதிக்ஷா(19). என்பவர் யாரிடமோ பேசிக்கொண்டு தண்டவாளத்தை கடந்தார். அதாவது 7–ம் எண் பிளாட்பாரத்திற்கு செல்வதற்கு நடைமேம்பாலம் வழியாக செல்ல சிரமப்பட்டு தண்டவாளத்தில் இறங்கினார். அப்போது பின்னால் வந்த சரக்கு ரயிலை கவனிக்க தவறினார்.
திடீரென திரும்பி பார்த்த பிரதிக்ஷா அதிர்ச்சி அடைந்து ஓட துவங்கினார். ரெயில் நெருங்கியதை பார்த்து இனி தப்ப இயலாது என்பதை உணர்ந்த அவர் திடீரென திரும்பி நின்று கண்ணை இறுக மூடிக்கொண்டு, கையால் தலையை பிடித்துக் கொண்டும் நின்றார். அப்போது சரக்கு ரெயில் என்ஜின் பிரதிக்ஷா மீது மோதிவிட்டு சென்றது. இதில் நிலைகுலைந்த பிரதிக்ஷா தண்டவாளத்தில் விழுந்தார். என்ஜினை அடுத்து ஒரு வேகனும் அவரை கடந்து சென்றது. பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர். அந்த பெண் இறந்திருப்பார் என்று முடிவுக்கு வந்தனர்.