ஏடிஎம்-ல் இரவு நேரத்தில் பணம் எடுக்கலாமா?

திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (15:58 IST)
சமீப காலமாக ஏடிஎம்களை உடைத்து திருடுவது, பாதுகாவலர்களை கொலை செய்து கொள்ளையடிப்பது, சில நேரங்களில் ஏடிஎம் இயந்திரங்களையே தூக்கிச் செல்வது என குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே இதனை தடுக்க மத்திய அமைச்சகம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. 
அதன்படி, ஏடிஎம் மையங்கள் பணம் நிரப்பப்படுவதற்கான நேரத்தை நிர்ணயித்துள்ளது மத்திய அமைச்சகம். 
# நகர்புறங்களில் உள்ள ஏடிஎம்களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பக் கூடாது,
# கிராமப்புறங்களில் உள்ள ஏடிஎம்களில் மாலை 6 மணிக்கு மேல் பணம் நிரப்பக் கூடாது,
# நக்சலைட் நடமாட்டம் உள்ள பகுதிகளில் மாலை 4 மணிக்கு மேல் ஏடிஎம்களில் பணம் நிரப்பக் கூடாது என உத்தவிட்டுள்ளது. 
 
மேலும், பணம் நிரப்ப கொண்டு செல்லப்படும் வாகனங்களில் ஒரு ஓட்டுனர், இரண்டு ஆயுதம் தாங்கிய காவலர்கள், இரண்டு ஏடிஎம் சமந்தப்பட்ட அதிகாரிகள் இருக்க வேண்டும். 
ஏடிஎம் மையங்களுக்கான பணத்தை கையாளும் நிறுவனங்கள் வேலை நாட்களில் முதல் பாதியில் வங்கியிலிருந்து பணத்தை பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 
 
இந்த புதிய செயல்முறை மாற்றங்கள் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதியில் இருந்து செயல்படக்கூடும் என தெரிகிறது. 
 
இதோடு, இரவு நேரங்களில் பணம் நிரப்பாமல் போனால் இரவு நேரங்களில் மக்கள் பணம் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் இந்த உத்தரவிற்கு எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்