பீகார் வெள்ளத்திற்கு எலிகளே காரணம்: வட இந்தியாவில் ஓர் தர்மாகோல் ராஜூவை கண்டுபிடிச்சாச்சு...
சனி, 2 செப்டம்பர் 2017 (18:29 IST)
பீகாரில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு எலிகளே காரணம் என்று பீகார் நீர்வளத்துறை அமைச்சர் லல்லன் சிங் தெரிவித்துள்ளார்.
பீகாரில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்தை எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பார்வையிட்ட நீர்வளத்துறை அமைச்சர், இவை அனைத்திற்கும் காரணம் எலிகள்தான் என கூறியுள்ளார்.
இதற்கு விளக்கமளித்த அவர் பின்வருமாரு கூறினார், உணவுக்கிடங்கில் உள்ள எலிகள், கரைகளை துளையிட்டு பலவீனப்படுத்திவிட்டதால் அது உடைந்து வெள்ளம் ஏற்பட்டுவிட்டது. வெள்ளத்திற்கு எலிகளே காரணம் என கூறியுள்ளார்.
ஊழலாலும், பலவீனமடைந்த கரைகளாலும் ஏற்பட்ட வெள்ளத்தை மறைக்க எலிகள் மீது பழி போட்டுள்ளார் அமைச்சர் என பீகார் அரசு மீது கண்டனங்கள் எழுந்துள்ளது.