கடந்த 2014ஆம் ஆண்டு வீசிய மோடி அலை இந்த தேர்தலில் இல்லை. மேலும் மோடி மற்றும் பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டதால் பெரும்பாலான ஊடகங்கள் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வராது என்றே செய்திகள் வெளியிட்டன. ஆனால் இன்று வெளிவந்து கொண்டிருக்கும் எக்சிட்போல் முடிவுகளில் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றே கூறுகின்றது.
இதற்கு முக்கிய காரணம் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இணையாததே என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமையில் ஒரு மெகா கூட்டணி இந்தியா முழுவதும் அமைந்திருந்தால் வெகு எளிதாக இந்த கூட்டணி ஆட்சியை பிடித்திருக்கும். ஆனால் மம்தா, மாயாவதி, அகிலேஷ் யாதவ், சந்திரசேகரராவ் போன்ற தலைவர்கள் ராகுல்காந்தியை பிரதமராக ஏற்காததால் பாஜகவுக்கு முடிவுகள் சாதகமாக போய்விட்டதாக கூறப்படுகிறது.
சுதர்சன் நியூஸ்: பாஜக 313 காங்கிரஸ் 121 மற்றவை: 109
நியூஸ் நேஷன்: பாஜக 282-290 காங்கிரஸ் 118-126 மற்றவை: 130-138