உத்தரப்பிரேதச மாநிலம் மதுரா மாவட்டத்தின் ஜவகர்பாத் பகுதியில், 260 ஏக்கர் நிலபரப்பு கொண்ட ஒரு பூங்காவை, ‘சத்தியாகிரகிகள்’ என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் பல வருடங்களாக சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர்.
போலீசாரை தாக்கிய ஆக்கிரமிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மோதல் வெடித்த பகுதியில் உள்ள கேஸ் சிலிண்டர்கள் வெடித்ததல், குடிசைகள் தீப்பிடித்து எரிந்தது. எனவே அந்த பகுதி புகை மூட்டமாக காணப்படுகிறது.