விடைபெறுகிறார் மன்மோகன் சிங் - ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்

சனி, 17 மே 2014 (12:59 IST)
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களை மட்டும்  பெற்று வரலாறு காணாத தோல்வியை பெற்றுள்ளது. இந்நிலையில் பிரதமர் பதவியிலிருந்து மன்மோகன் சிங் இன்றுடன் விடைபெறுகிறார்.
 
மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கும் ஆட்சிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி கூறினார். இதையடுத்து, அமைச்சரவை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
 
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையின் இறுதி கூட்டத்திற்கு மன்மோகன் சிங் தலைமை தாங்கினார்.அப்போது அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், 10 ஆன்டுகளாக தனக்கு ஒத்துழைப்பு அளித்த அமைச்சர்களுக்கு அவர் நன்றி கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மன்மோகன் சிங் குடியரசுத் தலைவர் மாளிகை சென்று அங்கு பிரணாப் முகர்ஜியை சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார்.
 
பாரதீய ஜனதா கட்சி 282 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்