மருத்துவ ஆக்ஸிஜன் பதுக்கல்… டெல்லியில் கைதுசெய்யப்பட்ட நபரிடம் 50 சிலிண்டர்கள்!

சனி, 24 ஏப்ரல் 2021 (08:09 IST)
மருத்துவ ஆக்ஸிஜனுக்காக இந்தியாவே அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில் அதை பதுக்கி வைத்து லாபம் பார்த்துள்ளார் டெல்லியைச் சேர்ந்த அனில் குமார் என்பவர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைத் தொட்டுவிட்டது. இப்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2000 ஆக உள்ளது. இந்நிலையில் இறப்போரில் பெரும்பாலனவர்கள் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் கிடைக்காததால் உயிரிழப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் கள்ள மார்க்கெட்டில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் விற்பனை படு ஜரூராக நடந்து வருகிறது.

டெல்லியில் அனில் குமார் என்பவர் பெரிய சிலிண்டரில் இருந்து சிறிய சிலிண்டருக்கு ஆக்ஸிஜனை மாற்றி 12,000 ரூபாய் என சட்டத்திற்குப் புறம்பாக விற்பனை செய்து வந்துள்ளார். அவரைக் கைது செய்த போலிஸார் சிலிண்டர்களைக் கைப்பற்றியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்