வழி கேட்ட சிறுமிக்கு ஆபாச படம் காண்பித்த காம கொடூரன்!
வியாழன், 6 ஜூலை 2017 (16:24 IST)
மஹாராஷ்டிர மாநிலம் பூனேவில் வழி கேட்டு சென்ற சிறுமிக்கு மென்பொறியாளர் ஒருவர் ஆபாச படம் காண்பித்துள்ளார். இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புனேவில் பிம்பிரி பகுதியில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் 32 வயதான கல்பேஷ் என்பவர். அவர் சம்பவம் நடந்த அன்று பானர் சாலையில் தனது காருடன் நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்துள்ள 15 வயது சிறுமி ஒருவர் சாலை நின்று கொண்டிருந்த கப்லேஷிடம் வழி கேட்டுள்ளார். அப்போது கப்லேஷ் தனது செல்ஃபோனில் உள்ள ஆபாச படங்களை காட்டி இதை பார்த்தால் தான் வழி கூறுவேன் என கூறியுள்ளார்.
செல்ஃபோனில் ஆபாச படத்தை பார்த்த சிறுமி அங்கிருந்து அலறியடித்து ஓடியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி அந்த குற்றவாளியின் அடையாளங்களை கூறி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் காவல்துறையினர் கப்லேஷை விரைந்து கைது செய்து அவனிடம் விசாரணை நடத்தினர். அதில் கப்லேஷ் இதற்கு முன்னரும் இதே போல பல பெண்களிடம் நடந்துகொண்டது தெரியவந்துள்ளது.