நேதாஜி பெயரில் புதிய பட்டாலியன்: முதல்வர் மம்தா அறிவிப்பு!

வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (17:52 IST)
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் புதிய பட்டாலியன் அமைக்கப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
தேர்தல் நெருங்க நெருங்க நேதாஜியின் பெயர் அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படும் என்பது தெரிந்ததே. சமீபத்தில் பாஜக, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் நேதாஜியின் பெயரை பயன்படுத்தி வருகின்றன என்பதும் அவரது பிறந்த நாளை அனைத்து கட்சிகளும் சிறப்பாக கொண்டாடின என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கொல்கத்தா காவல்துறையில் நேதாஜி என்ற பெயரில் புதிய பாட்டாலியன் பிரிவு உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே நேதாஜியை கவுரவப்படுத்தும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ள மம்தா பானர்ஜி தற்போது மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்திய அரசும் விரைவில் நேதாஜி பெயரில் ஒரு திட்டத்தை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்