பிரதமருக்கு மாம்பழங்களை அனுப்பியுள்ள மம்தா பானர்ஜி!

வியாழன், 1 ஜூலை 2021 (18:11 IST)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவருக்கு மாம்பழங்களை அனுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியை இப்போது வலுவாக எதிர்க்கும் மாநில முதல்வர்களில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முதலிடம் கொடுக்கலாம், அந்த அளவுக்கு காரசாரமாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் இப்போது மேற்கு வங்கத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோருக்கு மாம்பழங்களை அனுப்பியுள்ளார். அதே போல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் ஆகியோருக்கும் மாம்பழங்களை அனுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்