பாஜகவுக்கு எதிராக ஆள் திறட்டும் படத்தில் மம்தா!

வியாழன், 29 ஜூலை 2021 (08:35 IST)
ஒரே நாளில் சோனியா, கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்து எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுப்பட்டுள்ளார். 

 
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டெல்லி பயணத்தின் போது சோனியா காந்தி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து பேசிய மம்தா, பாஜகவை வீழ்த்துவதற்காக தனியாக என்னால் எதுவும் செய்ய முடியாது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் பல கட்சிகளுடன் முறைப்படி பேச்சுவார்த்தை மேலும் நடக்கும் என தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்