காரில் மோதி காயம்... மம்தா மீதான தாக்குதல் குறித்து அறிக்கை!

சனி, 13 மார்ச் 2021 (10:43 IST)
மேற்கு வங்க தலைமைச் செயலாளர் மம்தா மீது நடந்த தாக்குதல் குறித்து அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தார். 

 
மேற்கு வங்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த முறை பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பேனர்ஜி சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று அவரை எதிர்த்து போட்டியிட நந்திகிராம் தொகுதியை தேர்வு செய்துள்ளார். 
 
இதனால் அங்கு வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பரப்புரையை மேற்கொண்டார். பின்னர் தனது காருக்கு திரும்பும் நேரத்தில் காவலர்கள் பக்கத்தில் இல்லாத நேரம் பார்த்து அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதோடு முதுகிலும் அதிக வலி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து புகாரும் அளித்துள்ளார்.  
 
இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை அளிக்கும் படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் தனது அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தார். 
 
அதில், மம்தா பானர்ஜியின் காலில் கார் கதவு மோதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கார் கதவால் காயம் ஏற்பட்டது என்று கூறும் போது, மம்தா பானர்ஜியின் காலில் கதவு அறைந்ததற்கு என்ன காரணம் என்று அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்