அரசு பங்களாவை ராகுல் காந்தி காலி செய்ய நேர்ந்தால் எனது பங்களாவை அவருக்கு வசிக்க தருவேன் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகாஜூனே கார்கே தெரிவித்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதன் காரணமாக அவரது எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் அரசு பங்களாவில் வசித்து வரும் நிலையில் அதனை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது
ராகுல் காந்தி விரைவில் காலி செய்ய உள்ளதாக தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, ராகுல் காந்தியை பலவீனப்படுத்த பாஜகவினர் முயற்சி செய்கின்றனர் என்றும் ராகுல் காந்தியை பயமுறுத்தவதை, அச்சுறுத்த முயல்வதை கண்டிக்கிறேன் தெரிவித்தார்.