இந்தியா-மாலத்தீவு ரூ.3,000 கோடியில் ஒப்பந்தம்: பிரதமர் மோடி, அதிபர் முய்சு கையெழுத்து..!

Siva

செவ்வாய், 8 அக்டோபர் 2024 (07:25 IST)
மாலத்தீவு அதிபர் இந்தியா வருகை தந்துள்ள நிலையில், இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே ரூ.3000 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மாலத்தீவு அதிபராக பொறுப்பேற்றுள்ள முகமது முய்சு என்பவர், இந்தியா இடையேயான உறவில் பிரச்சனையை ஏற்படுத்தி வந்த நிலையில், அதன் பின் மனமாற்றம் அடைந்து, இந்தியாவுடன் நட்புறவை பாராட்டினார்.

இந்த நிலையில், மாலத்தீவு அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்த நிலையில், நேற்று பிரதமர் மோடி மற்றும் மாலத்தீவின் அதிபர் இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

மாலத்தீவு எப்போதும் இந்தியாவுடன் நட்பை பாராட்டி வருகிறது என்றும், மாலத்தீவுக்கு ஏதாவது பிரச்சனை அல்லது மருத்துவ உதவி தேவைப்பட்டால், உதவி செய்யும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதனை அடுத்து, பிரதமர் மோடி மற்றும் மாலத்தீவின் அதிபர் முன்னிலையில், இந்தியா-மாலத்தீவுக்கு இடையே ரூ.3000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தம் கையெழுத்தான பின், அதிபர் முகமது முய்சு மாலத்தீவின் சமூக பொருளாதார கட்டமைப்பு மேம்பாட்டில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், இந்தியா எப்போதுமே மாலத்தீவுக்கு மதிப்பு வாய்ந்த நாடாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு மாலத்தீவு குந்தகம் விளைவிக்கும் எந்த செயலையும் செய்யாது என்றும் அவர் உறுதியளித்தார்.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்