மாஸ்க்கில் மைக் வைத்து தேர்வில் நூதன முறைகேடு! – தப்பி ஓடிய நபர்!

ஞாயிறு, 21 நவம்பர் 2021 (09:48 IST)
மகாராஷ்டிராவில் காவலர் தேர்வில் மாஸ்க்கிற்குள் மைக் வைத்து ஒருவர் தேர்வில் முறைகேடு செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்

மகாராஷ்டிராவில் காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கான அரசு தகுதித் தேர்வு நடைபெற்றுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்வு நடந்த நிலையில் ஹிஞ்சேவாடி பகுதியில் தேர்வு எழுத தேர்வர் ஒருவர் வந்துள்ளார்.

அவர் அணிந்திருந்த மாஸ்க் வித்தியாசமாக இருப்பதை சந்தேகித்த போலீஸார் அதை அவரிடம் இருந்து வாங்கி பரிசோதித்துள்ளனர். அப்போது அதில் மைக், சிம் கார்டு, பேட்டரி ஆகியவை பொருத்தப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக தேர்வு எழுத வந்தவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். தேர்தலில் முறைகேடு செய்ய முயன்ற அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்