அரசு அலுவலகங்களில் பசு கோமிய பினாயில்தான் யூஸ் பண்ணனும்! – மத்திய பிரதேச அரசு உத்தரவு!

செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (17:30 IST)
மத்திய பிரதேசத்தில் அரசு அலுவலகங்களில் இனி பசு கோமிய பினாயில்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் பசு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலங்களில் மத்திய பிரதேசமும் ஒன்று. கடந்த 2017ம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் முதல் பசு சரணாலயம் அமைக்கப்பட்ட நிலையில் பின்னர் பல்வேறு காரணங்களால் அவை தனியார்மயமாக்கப்பட்டன.

இந்நிலையில் பசுவை பாதுகாக்கவும், பசு சார்ந்த பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும் மத்திய பிரதேச அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதல் நடவடிக்கையாக மத்திய பிரதேசத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பசு கோமிய பினாயில் தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவு வெளியாகியுள்ளது.

இதன்மூலம் பசு சார்ந்த பொருட்கள் விற்பனை அதிகரிக்கும் என்பதோடு, பசுக்களை பாதுகாக்கவும் இந்த முயற்சிகள் உதவும் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்