பான் ஆதார் எண்கள் இணைப்புக்கு மீண்டும் அவகாசம்.. இறுதி காலக்கெடு என தகவல்!

வியாழன், 2 பிப்ரவரி 2023 (17:34 IST)
பான்  ஆதார் எண் இணைப்பிற்கு ஏற்கனவே பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இறுதி கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பான் எண் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருக்கின்ற நிலையில் பான் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால் பான் கார்டு செயல் இழந்து விடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் தற்போது பணம் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31ஆம் தேதி கடைசி தினம் என்றும் இதுதான் இறுதி காலக்கெடு என்றும் வருமானவரித்துறை அறிவித்துள்ளது. 
வரிஏய்ப்பு, மோசடியான பண பரிவர்த்தனை ஆகியவற்றை தடுப்பதற்காக பான் ஆதார் எண்கள் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என வருமானவரித்துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மார்ச் 31க்குள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் என்றும் அவ்வாறு இணைக்காவிட்டால் ஏப்ரல் 1 முதல் பான் எண் செயலிழுக்கும் என்றும் வருமானவரித்துறை உறுதியாக தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து பான் கார்டு செயல் இழந்தால் அதை இணைத்து உருவாக்கப்பட்ட அனைத்து கணக்குகளும் முடங்க வாய்ப்பிருப்பதால் உடனடியாக இதுவரை இணைக்காதவர்கள் பான் ஆதார் எண்ணை இணைத்து விட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்