அனைத்து டிஜிட்டல் பணிகளுக்கும் பான் கார்டு மட்டுமே அடையாள அட்டை: நிர்மலா சீதாராமன்
புதன், 1 பிப்ரவரி 2023 (12:04 IST)
அனைத்து டிஜிட்டல் பணிகளுக்கும் இனி அடையாள அட்டையாக பான் கார்டு மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் பணிகளுக்கும் இனிய அடையாள அட்டையாக பான் கார்டு பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு குவிந்து வருகிறது.
மேலும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருவன:
கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு நிவாரணமாக ₹5,300 கோடி வழங்கப்படும்
5ஜி சேவைகளுக்கான செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள், பொறியியல் கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படும்
ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயம் நோக்கி வழிநடத்துவோம், இயற்கை உரங்கள் பயன்படுத்து ஊக்குவிக்கப்படும்
மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை ஒழிக்கப்படும்
10,,000 பயோ ரிசோர்ஸ் மையங்கள் அமைக்கப்படும் -
ழிவுநீர் அகற்றும் பணிகளில் மனிதர்களுக்கு பதில் 100% இயந்திரங்களை பயன்படுத்தப்படும்
சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு தனியாக டிஜி லாக்கர் உருவாக்கப்படும்
ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்ட வைரங்களுக்காக, சுங்கவரி குறைக்கப்படும்