நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

Mahendran

திங்கள், 11 நவம்பர் 2024 (16:19 IST)
நிலம் கையகப்படுத்தும் விவகாரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்த வந்த மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகளை ஊர்ப்பொதுமக்கள் ஓட ஓட விரட்டி அடித்த ஒரு சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.
 
தெலுங்கானா மாநிலம் விகரபாத் மாவட்டத்தில் உள்ள துயாலா என்ற பகுதியில் மருந்து நிறுவனத்திற்கு நிலம் காயகப்படுத்த அரசு ஒப்புக்கொண்டது. ஆனால் அந்த பகுதி ஊர் மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்,
 
இந்த நிலையில் மருந்து நிறுவனத்திற்கு நிலத்தை கொடுக்க வேண்டும் என்று சமரச பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கிராமத்திற்கு வருகை தந்தனர்.
 
அப்போது பொதுமக்கள் ஆத்திரமடைந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை தாக்க முயற்சி செய்தனர். இதனை அடுத்து ஆட்சியர் உட்பட அதிகாரிகள் காரில் தப்பிச்சென்ற நிலையில் பொதுமக்கள் ஓட ஓட விரட்டியதோடு கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.
 
இதனால் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தப்பி சென்றதாகவும் ஊர் மக்கள் இன்னும் கடும் ஆத்திரத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்