ஆட்சி அமைக்க உரிமை கோரும் லாலு மகன் தேஜஸ்வி

வியாழன், 27 ஜூலை 2017 (07:01 IST)
பீகாரில் நேற்று முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா செய்ததை அடுத்து பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இன்று மீண்டும் உரிமை கோருகிறார். எனவே அவர் இன்று மீண்டும் முதலமைச்சராக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்தது.



 
 
இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஆட்சி அமைக்க நாங்களும் உரிமை கோருவோம் என்று லாலுவின் மகன் தேஜஸ்வி தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பீகார் சட்டசபையில் அதிக எம்.எல்.ஏக்கள் எங்கள் கட்சிக்குத்தான் உள்ளது. எனவே சட்டப்படி எங்கள் கட்சியைத்தான் கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுவிக்க வேண்டும் என்றும் இதுகுறித்து கவர்னரை நேரில் சந்தித்து விளக்கவுள்ளதாவும் தேஜஸ்வி கூறியுள்ளார். இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்