லாலு பிரசாத் யாதவ்வின் உடல் நிலை மோசம் – 75 சதவீதம் செயலிழப்பு!

ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (18:29 IST)
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்வின் சிறுநீரகம் 75 சதவீதம் செயலிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பீஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தீவன ஊழல் வழக்கில் சிக்கி 27 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். சிறையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் ராஞ்சி மருத்துவமன, எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கடந்த ஓராண்டாக சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்கள் உள்ளன. தற்போது ராஜேந்திர பிரசாத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அவரது உடல்நிலை மோசமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. லாலுவின் சிறுநீரகம் இப்போது 75 சதவீதம் செயலிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக ரிம்ஸ் மருத்துவக் குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்