காங்கிரஸ் இல்லைனா வாரிசு அரசியல் இல்ல..! – பிரதமர் மோடி பேச்சு!

செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (15:33 IST)
இந்தியாவில் காங்கிரஸ் இல்லையென்றால் வாரிசு அரசியல் இருந்திருக்காது என பிரதமர் மோடி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பட்ஜெட் மீதான பல்வேறு விவாதங்களும், பிற நிகழ்வுகள் குறித்த உரையாடல்களும் நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் “வாரிசு அரசியலால் மற்றவர் திறமை புறக்கணிக்கப்படுகிறது. காங்கிரஸ் இல்லையென்றால் வாரிசு அரசியல் இருந்திருக்காது, ஊழல் இருந்திருக்காது” என்று பேசியுள்ளார்,

மேலும் “நம் நாட்டு மக்கள் கொரோனா  பிரச்னையை திறம்பட எதிர்கொண்டுள்ளனர். சில தலைவர்கள் தங்கள் தொகுதியைக் கூட கவனிப்பதில்லை. எதிர்க்கட்சியான பிறகு நாட்டை பற்றிக் கவலைப்பட வேண்டாம் என சிலர் செயல்படுகின்றனர்” என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்