நானும் பாதிக்கப்பட்டேன் : அம்ருதாவுக்கு ஆறுதல் கூறிய கௌசல்யா

வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (15:20 IST)
தெலுங்கானாவில் சாதி மாறி திருமணம் செய்த காரணத்தினால், கணவனை இழந்து வாடும் அம்ருதாவுக்கு, இந்த விவகாரத்தில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட கௌசல்யா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

 
தெலுங்கானாவில் அம்ருதா என்ற இளம்பெண், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பிரணய் பெருமுல்லா என்கிற வாலிபரை காதலித்து, பெற்றோரின் கடும் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.  3 மாத கர்ப்பிணியாக இருந்த அவரை அழைத்து சென்றுவிட்டு வெளியே வந்த போது, பிரணயை பின்னால் இருந்து இரும்பு கம்பியால் ஒரு நபர் தாக்கி கொலை செய்தார். 
 
இந்த விவகாரத்தில் அம்ருதாவின் தந்தையே ஆள் வைத்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்சியை ஏற்படுத்தியது.

 
இந்நிலையில், சாதி பாகுபாட்டில் கணவரை இழந்து வாடும் அம்ருதாவை, 2016ம் ஆண்டு உடுமலைப்பேட்டையில் கணவர் சங்கரை கண்முன்னே இழந்து வாடும் கௌசல்யா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அவர் தன்னுடைய கணவரை எப்படி கொன்றனர் என விளக்கினார். கௌசல்யாவுடன் சென்ற அவர் வழக்கறிஞர், அம்ருதாவிடம் உங்கள் கணவரை கொலை செய்ததற்கு என்ன காரணம்? என கேள்வி கேட்டார்.
 
அதற்கு அம்ருதா ‘சாதிதான் பிரச்சனை’ என பதிலளித்தார். அவர்களின் சந்திப்பு உருக்கமாக இருந்தது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்