சரக்கடிக்க இப்படி ஒரு மோசடியா? 5 ஸ்டார் ஓட்டல்களை குறிவைத்து கும்மாளம்!

திங்கள், 26 டிசம்பர் 2022 (19:49 IST)
5 ஸ்டார் ஓட்டல்களில் சென்று உயர்ரக மது அருந்தி விட்டு தப்பி செல்வதை வழக்கமாக கொண்டிருந்த தூத்துக்குடி நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் நாள்தோறும் பல்வேறு விதமான மோசடிகள் நடந்து வருகின்றன. பொதுவாக பணம், நகையை மையப்படுத்தியே பெரும்பாலான மோசடிகள் நடைபெறுகின்றன. ஆனால் தூத்துக்குடியை சேர்ந்த நபர் ஒருவர் மதுவுக்காக செய்த ஆள்மாறாட்ட மோசடி பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த வின்செண்ட் என்ற நபர் கேரளாவில் உள்ள பிரபலமான 5 ஸ்டார் ஹோட்டல்களில் சென்று அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கு விலை உயர்ந்த மதுபானங்கள், உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டு என்ஜாய் செய்துவிட்டு பணம் கொடுக்காமல் தப்பி சென்றுள்ளார். அவரது அடையாள அட்டையை சோதிக்கும்போது அது போலி என தெரிய வந்துள்ளது.

இதுபோல போலி அடையாள அட்டையை வைத்துக்கொண்டு, சரளமாக ஆங்கிலம் பேசிக் கொண்டு பல ஸ்டார் ஹோட்டல்களில் நுழைந்து மது அருந்தி மகிழ்ந்துள்ளார் வின்செண்ட். இந்நிலையில் சமீபத்தில் ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் அவ்வாறாக மோசடி செய்ய முயன்றபோது பிடிபட்டுள்ளார்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்