இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவல் குறைந்த நிலையில் பல மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்த நிலையில் கேரளாவும் தளர்வுகளை அறிவித்திருந்தது. இந்நிலையில் சுதந்திர தினம், பக்ரீத் பண்டிகைக்கு முழுமையான தளர்வுகள் கேரளாவில் அளிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளது
இதனால் வார இறுதி நாட்களில் மட்டும் ஊரடங்கு அறிவித்திருந்த கேரளாவில் இன்று முதல் முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய சாலைகள், கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.