கேரள, கர்நாடக மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!!

வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (11:04 IST)
கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு கன மழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடக உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
 
இடுக்கி மாவட்டத்தில் உள்ள கல்லார்குட்டி, மலன்காரா, பாம்ப்லா ஆகிய அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளன. அது போல் கோழிக்கோடு மாவட்டத்தில் சாலியார், சலிபுழா ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் வழிந்து சாலை மற்றும் பாலங்களில் ஓடுகிறது.
இந்நிலையில் மலப்புரம், இடுக்கி மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. 
 
எனவே, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகாவில் குடகு மாவட்டத்திலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்