உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் வகையில் சபாநாயகர் வெங்கையா நாயுடு, அவையை சற்று நேரம் ஒதுக்கிவைத்தார். இதன் பின்னர் அவை மீண்டும் கூடியபோது, காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி.க்களான நசீர் அகமது லவாய் மற்றும் எம்.எம்.பயாஸ் ஆகியோர் அரசியலமைப்பு சட்டத்தின் நகலை கிழிக்க முயன்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் சபாநாயகர் வெளியேற்றினார்.
அப்போது, அவர்களில் ஒருவர் திடீரென தனது சட்டையை கிழித்துகொண்டு ஆவேசத்துடன் கூச்சலிட்டார். பின்பு பாராளுமன்ற வளாகத்தில் மத்திய அரசை எதிர்த்து முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறுது நேரம் பாராளுமன்றத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.