தற்போது அவரின் நூற்றாண்டு விழாவை அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மேலும், தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவை விரைவில் சந்திக்கவுள்ளார்.
இந்நிலையில், பெங்களூர் இந்திரா நகர் பகுதியில் உள்ள அல்சூர் லட்சுமிபுரம் என்ற இடத்தில் அங்கு வசிக்கும் தமிழர்கள் எம்.ஜி.ஆரின் 101வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஒரு பேனர் வைத்திருந்தனர். அந்த பேனரில் கன்னடம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எம்.ஜி.ஆருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த இடத்திற்கு வந்த சில கன்னட அமைப்பினர், எம்.ஜி.ஆரை நாங்கள் மதிக்கிறோம். அவர் ஒரு மலையாளி. அவருக்கு கர்நாடகாவில் என்ன வேலை?. இங்கு ராஜ்குமாருக்கு மட்டும்தான் பேனர் வைக்க வேண்டும் எனக்கூறி அந்த பேனரை கிழித்து எறிந்தனர்.