இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக என்ற ஒரு கட்சி இல்லை என்றால் அண்ணா என்ற ஒருவர் பிறந்த வரலாறே தெரியாமல் போயிருக்கும் என்ற தகவலை கூறினார்.
மதுரையில் நடந்த எம்ஜிஆர் 101-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட செல்லூர் ராஜூ, எம்ஜிஆர் தான் தொடங்கிய கட்சியின் கொடியில் தனது தலைவரான பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்தைப் பொறித்தார். தான் ஏற்றுக்கொண்ட தலைவனின் உருவத்துடன் கூடிய கொடியைக் கொண்ட ஒரே இயக்கம் அதிமுகதான் என்றார். மேலும் எம்ஜிஆர் மட்டும் அதிமுகவைத் தொடங்காமல் இருந்திருந்தால், அண்ணா என்ற ஒருவர் பிறந்தார் என்ற வரலாறே தெரியாமல் போயிருக்கும் என்று பேசினார்.