கமல் மனநிலை சரியில்லாதவர்: பாஜக மூத்த தலைவர் கண்டனம்

வியாழன், 2 நவம்பர் 2017 (16:24 IST)
கமல்ஹாசன் தனது டுவிட்டரில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் தெரிவித்து வரும் நிலையில் ஆனந்த விகடன் பத்திரிகையில் 'என்னுள் மையம் கொண்ட புயல்' என்ற தலைப்பில் தொடர் எழுதி வருகிறார்.


 
 
இந்த வார இதழில் 'இந்து மதத்தில் தீவிரவாதிகள் இல்லை என்று கூற முடியாது என்றும், எங்கே ஒருஇந்து தீவிரவாதியை காட்டுங்கள் என்று இனி அவர்கள் சவால் விட முடியாது என்றும் கமல் கூறியுள்ளார்.
 
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு ஏற்கனவே இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது இன்னொரு மூத்த பாஜக தலைவரான வினய் கட்டியார் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்
 
கமல்ஹாசனின் மனநிலை ஒருநிலையில் இல்லை என்றும் இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியது அவசியம் என்றும் கூறிய வினய கட்டியார், அரசியலில் இதுபோன்ற அவதூறுகளை பரப்புவது தவறு என்றும் அவர் கூறிய கருத்துக்கு என்ன ஆதாரம் வைத்துள்ளார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே கமல் இவ்வாறு கருத்து தெரிவிப்பதாகவும் பாஜக செய்தி தொடர்பாளர் நரசிம்மராவ் கூறியுள்ளார்.,
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்