அடடா!! இப்படி ஒரு முதல்வரா??.. மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்த முதல்வர்
சனி, 27 ஜூலை 2019 (10:40 IST)
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அரசு செலவை ஏற்க மறுத்து தனது சொந்த செலவில் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற நாளில் இருந்தே பல அதிரடி திட்டங்களை அறிவித்து, ஆந்திர மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகிறார். கல்வி, வேலை வாய்ப்பு, இடஒதுக்கீடு ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்தி, பல அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.
ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும் முன்னால் முதல்வருமான ராஜசேகர ரெட்டி தனது குடும்பத்துடன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். அதனைத் தொடர்ந்து ஒவ்வொறு வருடமும் கிறுஸ்துவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் வருகிற ஆகஸ்டு 1 ஆம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி தனது குடும்பத்துடன் ஐதராபாத்திலிருந்து ஜெருசலேம் செல்கிறார்.
இதனையடுத்து வருகிற ஆகஸ்டு 15 ஆம் தேதி, அமெரிக்காவிற்கும் செல்லவுள்ளார். ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்ற பிறகு செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுதான். இந்த பயணத்திற்கு அரசு செலவை ஏற்க மறுத்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.
தனது சொந்த விஷயமாக பயணம் மேற்கொள்ளவுள்ளதால் அரசு செலவை எற்க மறுத்தாதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஆட்சியில் உள்ள அரசியல் தலைவர்கள், அரசாங்க செலவில் பல வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வர், தனது சொந்த செலவில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது, அம்மாநில மக்களை பெரும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து உள்ளது.