வயநாட்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி

வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (20:01 IST)
கேரள  மாநிலம் வயநாட்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்தில்,9 பேர் பலியாகியுள்ளனர்.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான  ஆட்சி நடந்து வருகிறது.

அங்கு, வயநாடு  மாவட்டத்தில் தாளப்புழா கண்ணோட் மலை அருகே தோட்டமொன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு ஜீப் சென்று கொண்டிருந்தது.

அப்போது சாலையோரம் இருந்த பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், 8 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் பலியாகினர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களை மானந்தவாடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

2 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும் 13 பேர் பயணம் செய்த நிலையில் விபத்தில் பலியானவர்கள் அனைவரும், வயநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்