ஜல்லிக்கட்டு வழக்கு: உச்ச நீதிமன்றத்தை அதிர வைத்த தமிழக வழக்கறிஞரின் வாதம்!

புதன், 1 பிப்ரவரி 2017 (10:35 IST)
கடந்த ஆண்டுகளில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டி நீதிமன்றத்தில் தமிழகம் சார்பில் வாதாடியவர்கள் சரியாக வாதாடவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய தமிழக வழக்கறிஞரின் வாதம் பாரட்டும்படியாக இருந்ததாக கூறப்படுகிறது.


 
 
பராசுரன் தலைமையில் சிறப்பாக வாதாடிய தமிழக வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தின் சரமாரியான கேள்விகளுக்கு அதிரடியாக பதிலளித்தனர். அதன் சுருக்கம் கீழே:-
 
நீதிமன்றம்: 2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மதிக்காததால் தான் தமிழகத்தில் வன்முறை நிகழ்ந்தது.
 
தமிழக அரசு வழக்கறிஞர்: பொதுமக்களின் போராட்டம் அமைதியாகவே நடந்தது. ஜல்லிக்கட்டை நடத்த புதிய சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பதற்கான எழுச்சி அது. மக்களுக்கு போராட்டம் நடத்து அவர்களின் அடிப்படை உரிமை இல்லையா?
 
நீதிமன்றம்: போராட்டம் அமைதியாக நடைபெற்றதாக நீங்கள் கூறினாலும் அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத செயல். 
 
தமிழக அரசு வழக்கறிஞர்: போராட்டம்  முழுவதும் அமைதியாகவே நடைபெற்றது. ஆனால் சில சம்பவங்கள் திடீரென எதிர்பார்க்காமல் நடைபெற்றவை.
 
நீதிமன்றம்: உச்ச நீதிமன்றம் தான் இறுதியான நடுவர். அதன் தீர்ப்பை மதித்து, கீழ்படிய வேண்டும்.
 
தமிழக அரசு வழக்கறிஞர்: 2014-ஆம் ஆண்டு ஜல்லிகட்டிற்கு தடை போட்ட நீதிபதி நாகராஜனின் தீர்ப்பு மீறப்படவில்லை. ஜனவரி 23-ஆம் தேதி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்த பின்னர் தான் ஜல்லிகட்டு நடந்தது. போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை இல்லையா? சட்டத்தை மாற்ற வேண்டும் என மக்கள் கூறினர். சட்டம் இயற்றுபவர்களின் காதுகளில் அது விழவில்லை.
 
நீதிமன்றம்: உச்சநீதிமன்றத்தின் மான்பை காப்பாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் கவலை. ஜல்லிகட்டில் எப்படி 4 பேர் உயிரிழந்தனர்?.
 
தமிழக அரசு வழக்கறிஞர்: கிரிக்கெட் விளையாட்டிலும் தான் வீரர்கள் இறக்கின்றனர். டெல்லியில் ஒரு கிரிக்கெட் வீரர் உயிரிழந்தார். அதற்காக நாம் கிரிக்கெட்டை தடை செய்ய முடியுமா? என்றார் அதிரடியாக.

மத்திய பட்ஜெட் 2017-18: உடனுக்குடன் (Live Update)

வெப்துனியாவைப் படிக்கவும்