இரண்டரை வருடம் மட்டுமே! ஜெகன்மோகன் கண்டிஷனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர்கள்!

ஞாயிறு, 9 ஜூன் 2019 (09:03 IST)
ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி சமீபத்தில் பொறுப்பேற்று கொண்ட நிலையில் நேற்று ஐந்து துணை முதல்வர்களும், 20 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்தியாவில் முதல்முறையாக ஐந்து துணை முதல்வர்கள் பதவியேற்றது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
இந்த நிலையில் துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்களுக்கும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு நிபந்தனை விதித்துள்ளாராம். அது, அனைத்து அமைச்சர்களின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே. அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு முற்றிலும் புதிய அமைச்சரவை என்றும் கூறியுள்ளாராம். இந்த கண்டிஷனுக்கு ஒப்புக்கொள்பவர்கள் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்று கொள்ளலாம் என்றும் நிபந்தனைக்கு கட்டுப்பட மறுப்பவர்கள் இப்போதே தாராளமாக விலகிக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளாராம்
 
இந்த அமைச்சரவை பட்டியலில் நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான ரோஜா பெயர் இல்லாததால் அவர் இரண்டரை வருடங்கள் கழித்து துணை முதல்வராகவோ அல்லது அமைச்சராகவோ பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ரோஜாவுக்கு சபாநாயகர் பதவியை தர ஜெகன்மோகன் முடிவு செய்துள்ளதாகவும் இன்னொரு தகவல் கூறுகின்றது. எந்த தகவல் உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்